உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைச் சந்தித்தது.

கோராக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோன்று, புல்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ்பிரசாத் மவுரியா அம்மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து காலியான இந்த இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.11) இடைதேர்தல் நடைபெற்றது. கோராக்பூர் தொகுதியில் பாஜக சார்பில் உபேந்திர தத் சுக்லாவும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் பிரவின் குமார் நிஷாத்தும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் கோராக்பூரில் 47.45 சதவிகித வாக்குகளும், புல்பூரில் 38 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்நிலையில் புதன்கிழமை (இன்று) காலை எட்டு மணி முதல் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் கோராக்பூர் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரவின் குமார் நிஷாத் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். அதேபோன்று, புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல் 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தினார். இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here