உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் எட்டு வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு போலீசார் அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிம் மதுராவின் மோகன்புர் பகுதியில், குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற போலீசாரும், குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மாதவ் பரத்வாஜ் (8) என்னும் சிறுவன், குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

bharadwaj

இந்த சம்பவம் குறித்து பேசிய மதுரா காவல்துறை அதிகாரி வினய் சவுகான், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மனோஜ் என்னும் குற்றவாளியைப் பிடிக்க மோகன்புர் கிராமத்திற்கு போலீசார் சென்றதாகவும், அங்கு போலீசாரைக் கண்ட அந்த குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சிறுவனின் குடும்பத்துக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. மேலும் சவ்ரப் ஷர்மா மற்றும் உத்தம் சிங் ஆகிய இரு போலீசாரை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கடந்த ஜனவரி 10ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற கடந்த பத்து மாதங்களில் போலீசார் நடத்திய 921 என்கவுண்ட்டர்கள் சம்பவங்களில் இதுவரை 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த என்கவுண்ட்டர் சம்பவங்களில் 196 கிரிமினல்களும், 212 போலீசாரும் காயமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்