உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நவ.22, நவ.24 மற்றும் நவ.29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 52.59 சதவிகித வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 49.3 சதவிகித வாக்குகளும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் 53 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

பாஜக 14 மாநகராட்சிகளில் வெற்றி:

bjp1

தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள 16 மாநகராட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி 14 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. வாரணாசி, கோரக்பூர், காஸியாபாத், பரேலி, ஆக்ரா, ஃபிரோஸாபாத், அயோத்யா, மதுரா, லக்னோ, கான்பூர், ஷகரன்பூர், ஜான்ஸி மற்றும் மொராதாபாத் ஆகிய மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது. அதேபோன்று அலிகார் மற்றும் மீரட் மாநகராட்சி மேயர் பதவிகளை பகுஜன் சமாஜ் கட்சி கைப்பற்றியுள்ளது.

மோடி, ஆதித்யநாத் வாழ்த்து:

modi

பாஜக பெற்றுள்ள அமோக வெற்றி குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இது உத்தரப் பிரதேச மக்களின் வெற்றி என தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றியைக் கொடுத்த உத்தரப் பிரதேச மாநில மக்களுக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

லக்னோ முதல் பெண் மேயர்

san

உத்தரப் பிரதேச மாநில தலைநகரான லக்னோ மாநகராட்சிக்கு முதல் முறையாக பெண் மேயர் தேர்வாகியுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட சன்யுக்தா பாட்டியா 1,31,356 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மேலும் புதிதாக அறிவிக்கப்பட்ட அயோத்தி மாநகராட்சிக்கு பாஜகவைச் சேர்ந்த ரிஷிகேஷ் உபாத்யாய் மேயராக தேர்வாகியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஃபேஸ்புக்குக்கு அடிமையானவரா நீங்கள் ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்