திருச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், மய்யம் பெயரைப் பலர் கேலி செய்வதாகவும், மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும், நியாயமும் புரியும் என்றும் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, கர்ப்பிணிப் பெண் உஷா என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பேசிய கமல்ஹாசன், உஷா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது என்றும், நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியைச் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்