உள்ளேயும் வெளியேயும் அவர் சிறந்த மனிதர் – அமலா பால் யாரைச் சொல்கிறார்?

0
188

சினிமாவுக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் சிறந்த மனிதர் என்று தன்னுடன் நடித்த நடிகர் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார் அமலா பால். அவரிடம் பாராட்டு பெற்ற அந்த நடிகர், அரவிந்த்சாமி.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் முதல்முறையாக அரவிந்த்சாமியுடன் நடித்துள்ளார் அமலா பால். பொங்கலுக்கு வெளியாவதாக சொல்லப்பட்ட படம் ஜனவரி 26 க்கு தள்ளிப் போயுள்ளது. இந்தப் படத்தில் அரவிந்த்சாமியுடன் நடித்த அனுபவம் குறித்து பேசிய அமலா பால்,

அரவிந்த்சாமியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது. சினிமாவுக்கு உள்ளேயும் வெளியிலும் மிகச்சிறந்த மனிதர் அரவிந்த்சாமி என்று புகழ்ந்துள்ளார்.

அரவிந்த்சாமியுடன் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா மறுத்ததால் இந்த வாய்ப்பு அமலா பாலுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: லோயா மரணத்திலுள்ள உண்மை வெளிப்படும்’: யஷ்வந்த் சின்கா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்