உள்ளாட்சி தேர்தல்; பள்ளிக் கல்லூரிகளுக்கு 6 ஆம் தேதி (நாளை) விடுமுறை

0
248

தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோதல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளையும் 2ம் கட்ட தேர்தல் அக்டோபர் 9ம் தேதியும் நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்கள் மற்றும் தற்செயல் தேர்தல் நடைபெறும் 28 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதேபோல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பினை அந்தந்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பள்ளிகள் தேர்தல் வாக்குசாவடி மையங்களாக செயல்படவுள்ளதாலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லவுள்ளதாலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here