உள்ளாட்சித் தேர்தலை வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் நடத்துவது தமிழக அரசின் கையில்தான் உள்ளது என உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு முறையைச் சரியாக பின்பற்றபடவில்லை என்றும் அதனால் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சித்தேர்தல் நடத்தத் தடை விதித்து உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள் : காஷ்மீர் வன்முறைக்கு வாட்ஸ் அப் குழுக்கள் காரணமா?

இதற்கிடையில், உள்ளாட்சித்தேர்தல் நடத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது. அதில் வாக்காளர் பட்டியல் சேகரிக்கும் பணி முடிவடையாததாலும், பள்ளி மாணவர்களின் தேர்வு காரணமாகவும் மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், திங்கட்கிழமை (இன்று) நடைபெற்ற விசாரணையின்போது உள்ளாட்சித் தேர்தலை வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் நடத்துவது தமிழக அரசின் கையில்தான் உள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்த இடஒதுக்கீடு குறித்த விவகாரத்தைத் தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், அந்தப் பணிகளை நிறைவேற்றி தந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தத் தயார் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஆதார் தகவல்கள் கசிந்தது எப்படி?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்