விமான எரிபொருளின் விலை உயர்வால், நம் நாட்டில், உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம், ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.நம் நாட்டில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, அடுத்த மாதம் இறுதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: ஏ.டி.எப்., எனப்படும் விமானத்திற்கு உபயோகிக்கப்படும் எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

 எனவே, அதை கருத்தில்கொண்டு, விமான சேவையின் குறைந்தபட்ச கட்டணம், ஐந்து சதவீதம் உயர்த்தப்படுகிறது.எனினும், அதிகபட்ச விமான கட்டணம், உயர்த்தப்படவில்லை. ஒரு மாதத்தில், 3.5 லட்சத்திற்கும் அதிகமான பயணியர், விமான சேவைகளை பயன்படுத்தினால், 100 சதவீத விமானங்கள் மீண்டும் இயக்கப்படும்.இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here