உளவு காத்த கிளி – 7

Adventures of Indian Secret Agent Vikram

0
758
துப்பறிவாளன் விக்ரமின் சாகசங்கள் தொடர்கின்றன.

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

பிப்ரவரி 12 2009

ரயிலடியில் அடுத்த நாள் நண்பகலில் செல்லவிருந்த ஏதோ ஒரு ரயிலுக்கு ஒரு 2-ஆம் வகுப்பு ஸ்லீப்பர் டிக்கட் வாங்கினேன். அதையே காரணம் காட்டி வெயிட்டிங் ரூமில் டேரா போட்டேன். அங்குள்ள சிப்பந்திக்கு ஒரு நூறு ரூபாய் நோட்டை லஞ்சமாகக் கொடுத்தேன். “இது திருட்டு தம்முக்கோசம்,” என்றேன். இளித்தான். “க்வாட்டர் காவலண்டே செப்பண்டி,” என்று தண்ணியடிக்கும் ஆஃபரையும் அளித்தான். “நேனு ஷுகர் பேஷண்டு,” என்று ஒரு பொய்யைக் கூறி செட்டில் ஆவதற்குள் அங்குள்ள அழுக்கடைந்த சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த ஏதோ ஒரு போஸ்டர் போன்ற இரண்டு கால் பிராணியாகிவிட்டேன். அந்த அளவுக்குக் கச்சிதமான கொல்டி நாட்டுப்புறத்தான் வேடம்.

ரயிலடியிலிருந்த ஒரு பப்ளிக் பூத்திலிருந்து எனது டெல்லி தலைமை ஆஃபீஸுக்கு ஒரே ஒரு ஃபோன். அதையும் யாரும் எடுக்கவில்லை. அது நான் இருக்கும் இடத்தைக் குறிக்கும் ஒரு ஸிக்னல். அடுத்த 20-ஆவது நிமிடத்தில் தக்கபடி மாறுவேடத்தில் படைகள் வந்தன. மாறுவேடம் என்ற சொல் கன்ஃபியூஸ் பண்ணும். போலி ரயில்வே ப்ரொட்டக்ஷன் ஃபோர்ஸ் அங்கியில் சிலர். ரேப்பிட் ஆக்சன் ஃபோர்ஸ் அங்கியில் சிலர். மொத்தம் 12 பேர். ரயிலடிக்கு உள்ளேயும், வெளியேயும். தயார் நிலையில் ஒரு இரும்புக் கவச வண்டி. எவனுக்கும் சந்தேகமே வராத வண்ணம் நின்றது. இப்போது பல ரயிலடிகளில் இது போன்ற வண்டிகள் நிற்பது எல்லோருக்கும் பழக்கமாகி விட்டது. இந்தியாவிலேயே மிகவும் சோம்பேறியான கும்பல் என ஒன்று உண்டென்றால், அது ஆர் பி எஃப் என்ற ரயில்வே பாதுகாப்புப்படை. ரேணிகுண்டாவில் மூன்று நபர்கள் மட்டுமே அஃபிஷியலாக இருந்தார்கள். மூவரும் காவல் துறை அறையில் ரம்மி ஆடுவதில் மும்முரமாக இருந்தார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் ரெயில்வே எப்போதோ ஃபெயில்வே ஆகி விட்டிருந்தது. யார் எக்கேடு கெட்டாலும் அவர்களுக்குக் கவலை இல்லை.

இதையும் படியுங்கள்: பிராடா கேன்டியும் ஆப்பிள் போனும்

ரயில் நிலையத்தில் டீ சாப்பிடும் பாசாங்குகளின்போது தேட வேண்டிய அல்லது கவனிக்க வேண்டிய ஆள் எப்படி இருக்கலாம் என எனது தோழர்களிடம் டிஸ்கஸ் பண்ணினேன். என்னைக் காண வரும் நபர் யாராக இருக்கலாம் என்ற கணக்கை எனது பாஸ்கள் ஏற்கனவே கணக்கிட்டிருந்தனர். மிகவும் அலர்ட்டாக, ரயில் நிலையத்தை சல்லடை போட ஆரம்பித்தோம். அமெச்சூர் உளவாளிகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அருகிலுள்ள ஏதேனும் கண்ணாடியில் தலையைச் சீவிக்கொள்வதுபோல நடித்து, பின் தொடர்வோரைக் கண்டுபிடிக்க முயல்வார்கள். சந்தேகம் வந்த நபர்களிடம் பேச்சுக் கொடுக்க எத்தனிப்பார்கள். கூட்டாளிகளுக்கு காதைச் சொறிந்தோ, மூக்கை உருவியோ சைகைகள் செய்வார்கள். கொஞ்சம் புத்திசாலித்தனம் அதிகமுள்ளவர்கள் கண்களால் சைகைகள் ஸிக்னல் கொடுப்பார்கள்.

இது போன்ற எந்தச் சம்பவமும், இரவு முழுவதும் அங்கு நடக்கவில்லை.

அது எங்களைப் பொறுத்தவரை சிவராத்திரி ஆயிற்று. கண் விழித்தோம்.
இதெல்லாம் எங்களுக்குப் பழக்கமான விஷயங்கள். 72 மணி நேரம் மிகவும் உஷார் நிலையில் விழித்திருக்க, எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வரும் மக்கள் வெள்ளம் காரணத்தால் எப்போதுமே ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஜன நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.

புனித யாத்ரிகள் மடிய நாம் காரணமாக இருக்கக் கூடாதே என்று ஏழு மலையானை வேண்டிக் கொண்டேன்.

(அடுத்த வாரம் தொடரும்)

இதையும் படியுங்கள்: டைட்டானிக் கப்பலை எரித்தது பனியா? தீயா?

இதையும் படியுங்கள்: பஞ்ச பூதங்களும் 61 அடிப்படைத் துகள்களும்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்