2018ஆம் ஆண்டின் உலகப் பத்திரிகை சுதந்திர தரவரிசை பட்டியலில் இந்தியா, மேலும் இரண்டு இடங்கள் சரிந்து 138வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று, மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தீப் ஷர்மா, மணல் மாஃபியா கும்பலால் லாரி ஏற்றி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள், பீகாரில் இரண்டு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் டைனிக் பாஸ்கர் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்கள். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற தொடர் சம்பவங்களால், உலகப் பத்திரிகை சுதந்திர தரவரிசை பட்டியலில், இந்தியா மேலும் இரண்டு இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 180 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் கடந்தாண்டு இந்தியா 136வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் இந்தாண்டில் 138வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும், இலங்கை 131வது இடத்திலும், பாகிஸ்தான் 139வது இடத்திலும், வங்கதேசம் 146வது இடத்திலும், சீனா 176வது இடத்திலும் உள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் நார்வேயும், கடைசி இடத்திலும் வடகொரியாவும் உள்ளன.

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here