தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம்உலகமெங்கும் எதிரொலித்து வருகிறது. ஒருநாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தங்கமே நிர்மாணிக்கிறது.

இந்நிலையில், உலகம் முழுமையிலும் தங்கள் தலைமை வங்கியில் உள்ள தங்கத்தின் இருப்புக்கு ஏற்பவே எல்லா நாடுகளும் பணத்தை புழக்கத்தில் விடுகின்றன. இதனால் தங்கத்தை இருப்பு வைத்துக்கொள்வதில் உலக நாடுகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்படுகிறது.

உலக அளவில் இன்று தங்கத்தை அதிக அளவில் இருப்பு வைத்துள்ள நாடு அமெரிக்கா. உலக தங்க கவுன்சில் சமீபத்தில் வெளியிட்ட உத்தேச மதிப்பு பட்டியலின் படி அமெரிக்கா 8133.5 டன் தங்கத்தை இருப்பு வைத்துள்ளது. இதற்கு அடுத்த படியாக ஜெர்மனிதான் அதிக அளவு தங்கத்தை வைத்துள்ளது. ஜெர்மனி நாட்டின் தங்க இருப்பு 3367.8 டன்.

அந்த நாடுகளை தொடர்ந்து இத்தாலி 2451.8 டன், பிரான்ஸ் 2436.1 டன், ரஷியா 2207 டன், சீனா 1926.5 டன், சுவிட்சர்லாந்து 1040 டன், ஜப்பான் 765.2 டன், இந்தியா 618.2 டன், நெதர்லாந்து 612.5 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.