உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் ஆரப்பமாகின்றது. 27 தொடர்களில் மொத்தம் 72 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப்போட்டிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள், வங்கதேசம் உள்ளிட்ட 9 அணிகள் ஆடுகின்றன. இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் வரும்2021 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.

ஒவ்வொரு அணியும் 3 உள்ளூர் மற்றும்  3 வெளியூர் ஆட்டங்களில் பங்கேற்று விளையாடும். ஒவ்வொரு தொடரும் 120 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டு, ஆட்டங்கள் புள்ளிகளின் அடிப்படையில் பகிரப்படும். 2 ஆட்டங்கள் கொண்ட தொடர் என்றால் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் 60 புள்ளிகள் தரப்படும், 3 ஆட்டங்கள் கொண்ட  தொடருக்கு தலா 40 புள்ளிகள் தரப்படும். டை ஆனால் 50 சதவீத புள்ளிகள் தரப்படும். டிரா ஆகும் ஆட்டத்துக்கு 3-1 விகிதப்படி புள்ளிகள் தரப்படும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுடன் மோதுகிறது. 2 முதல் 5 ஆட்டங்கள் வரை ஒவ்வொரு தொடரில் இடம் பெறும். இந்த டெஸ்ட் தொடரில் பகலிரவு ஆட்டங்களும் நடைபெற இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அணியும் ஆடும் ஆட்டங்களின் விபரம் வருமாறு:  

இந்தியா: 18 டெஸ்டுகள் 

ஆகஸ்ட் 2019: 2 டெஸ்டுகள் vs மே.இ. அணிகள் (வெளிநாடு)

அக்டோபர் – நவம்பர் 2019: 3 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா (உள்ளூர்)

நவம்பர் 2019: 2 டெஸ்டுகள் vs வங்கதேசம் (உள்ளூர்)

பிப்ரவரி 2020: 2 டெஸ்டுகள் vs நியூஸிலாந்து (வெளிநாடு)

டிசம்பர் 2020: 4 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா (வெளிநாடு)

ஜனவரி – பிப்ரவரி 2021: 5 டெஸ்டுகள் vs இங்கிலாந்து (உள்ளூர்)

இங்கிலாந்து: 22 டெஸ்டுகள்

ஆகஸ்ட் 2019: 5 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா (உள்ளூர்)

டிசம்பர் 2019 – ஜனவரி 2020: 4 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா (வெளிநாடு)

மார்ச் 2020: 2 டெஸ்டுகள் vs இலங்கை (வெளிநாடு)

ஜூன் – ஜூலை 2020: 3 டெஸ்டுகள் vs மே.இ. தீவுகள் (உள்ளூர்)

ஜூலை – ஆகஸ்ட் 2020: 3 டெஸ்டுகள் vs பாகிஸ்தான் (உள்ளூர்)

ஜனவரி – பிப்ரவரி 2021: 5 டெஸ்டுகள் vs இந்தியா (வெளிநாடு)

ஆஸ்திரேலியா: 18 டெஸ்டுகள்

ஜூலை – ஆகஸ்ட்-செப்டம்பர் 2019: 5 டெஸ்டுகள் vs இங்கிலாந்து (வெளிநாடு)

நவம்பர் 2019: 2 டெஸ்டுகள் vs பாகிஸ்தான் (உள்ளூர்)

டிசம்பர் 2019-ஜனவரி 2020: 3 டெஸ்டுகள் vs நியூஸிலாந்து (உள்ளூர்)

பிப்ரவரி2020: 2 டெஸ்டுகள் vs வங்கதேசம் (வெளிநாடு)

நவம்பர்-டிசம்பர் 2020: 4 டெஸ்டுகள் vs இந்தியா (உள்ளூர்)

பிப்ரவரி-மார்ச் 2021: 3 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா (வெளிநாடு)

தென் ஆப்பிரிக்கா: 15 டெஸ்டுகள்

அக்டோபர் 2019: 3 டெஸ்டுகள் vs இந்தியா (வெளிநாடு)

டிசம்பர் 2019-ஜனவரி 2020: 4 டெஸ்டுகள் vs இங்கிலாந்து (உள்ளூர்)

ஜூலை – ஆகஸ்ட் 2020: 2 டெஸ்டுகள் vs மே.இ. தீவுகள் (வெளிநாடு)

ஜனவரி 2021: 2 டெஸ்டுகள் vs இலங்கை (உள்ளூர்)

ஜனவரி – பிப்ரவரி 2021: 2 டெஸ்டுகள் vs பாகிஸ்தான் (வெளிநாடு)

பிப்ரவரி-மார்ச் 2021: 3 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா (உள்ளூர்)

நியூஸிலாந்து: 14 டெஸ்டுகள்

ஜூலை – ஆகஸ்ட் 2019: 2 டெஸ்டுகள் vs இலங்கை (வெளிநாடு)

டிசம்பர் 2019-ஜனவரி 2020: 3 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா (வெளிநாடு)

பிப்ரவரி2020: 2 டெஸ்டுகள் vs இந்தியா (உள்ளூர்)

ஆகஸ்ட்-செப்டம்பர் 2020: 2 டெஸ்டுகள் vs வங்கதேசம் (வெளிநாடு)

நவம்பர்-டிசம்பர் 2020: 3 டெஸ்டுகள் vs மே.இ. தீவுகள் (உள்ளூர்)

டிசம்பர் 2020: 2 டெஸ்டுகள் vs பாகிஸ்தான் (உள்ளூர்)

இலங்கை: 13 டெஸ்டுகள்

ஜூலை – ஆகஸ்ட் 2019: 2 டெஸ்டுகள் vs நியூஸிலாந்து (உள்ளூர்)

அக்டோபர் 2019: 2 டெஸ்டுகள் vs பாகிஸ்தான் (வெளிநாடு)

மார்ச்-ஏப்ரல் 2020: 2 டெஸ்டுகள் vs இங்கிலாந்து (உள்ளூர்)

ஜூலை – ஆகஸ்ட் 2020: 3 டெஸ்டுகள் vs வங்கதேசம் (உள்ளூர்)

ஜனவரி 2021: 2 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா (வெளிநாடு)

பிப்ரவரி-மார்ச் 2021: 2 டெஸ்டுகள் vs மே.இ. தீவுகள் (வெளிநாடு)

பாகிஸ்தான்: 13 டெஸ்டுகள்

அக்டோபர் 2019: 2 டெஸ்டுகள் vs இலங்கை (உள்ளூர்)

நவம்பர்-டிசம்பர் 2019: 2 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா (வெளிநாடு)

ஜனவரி – பிப்ரவரி 2020: 2 டெஸ்டுகள் vs வங்கதேசம் (உள்ளூர்)

ஜூலை – ஆகஸ்ட் 2020: 3 டெஸ்டுகள் vs இங்கிலாந்து (வெளிநாடு)

டிசம்பர் 2020: 2 டெஸ்டுகள் vs நியூஸிலாந்து (வெளிநாடு)

ஜனவரி – பிப்ரவரி 2021: 2 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா (உள்ளூர்)

வங்கதேசம்: 14 டெஸ்டுகள்

நவம்பர் 2019: 3 டெஸ்டுகள் vs இந்தியா (வெளிநாடு)

ஜனவரி – பிப்ரவரி 2020: 2 டெஸ்டுகள் vs பாகிஸ்தான் (வெளிநாடு)

பிப்ரவரி2020: 2 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா (உள்ளூர்)

ஜூலை – ஆகஸ்ட் 2020: 3 டெஸ்டுகள் vs இலங்கை (வெளிநாடு)

ஆகஸ்ட்-செப்டம்பர் 2020: 2 டெஸ்டுகள் vs நியூஸிலாந்து (உள்ளூர்)

ஜனவரி – பிப்ரவரி 2021: 3 டெஸ்டுகள் vs மே.இ. தீவுகள் (உள்ளூர்)

மே.. தீவுகள்: 15 டெஸ்டுகள்

ஜூலை – ஆகஸ்ட் 2019: 2 டெஸ்டுகள் vs இந்தியா (உள்ளூர்)

ஜூன் – ஜூலை 2020: 3 டெஸ்டுகள் vs இங்கிலாந்து (வெளிநாடு)

ஜூலை – ஆகஸ்ட் 2020: 2 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா (உள்ளூர்)

நவம்பர்-டிசம்பர் 2020: 3 டெஸ்டுகள் vs நியூஸிலாந்து (வெளிநாடு)

ஜனவரி – பிப்ரவரி 2021: 3 டெஸ்டுகள் vs வங்கதேசம் (வெளிநாடு)

பிப்ரவரி-மார்ச்2021: 2 டெஸ்டுகள் vs இலங்கை (உள்ளூர்)