[vc_facebook type=”standard”][vc_tweetmeme type=”horizontal”]

இன்று உலக சுற்றுச் சூழல் தினம் (ஜூன் 5) புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது.

கடந்த 1972 ஆம் வருடம் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை ஜூன் 5ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்து
அன்று முதல் ஒவ்வொரு வருடமும் இந்த உலக சுற்றுச் சூழல் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

’பிளாஸ்டிக் மாசை ஒழிப்போம்’ என்ற ஒரே நோக்கோடு ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

De4GSLRXkAYCpY7

இதைதொடர்ந்து, இயற்கையை பாதுகாக்கும் விதமாகவும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் விதமாகவும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடுமுழுவதும் நடத்தப்படுகின்றன.

இந்தியாவில் சுற்றுசூழல் தின கொண்டாட்டம் ஒரு வாரத்துக்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ளது.