இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை போட்டிகளில் 13வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பிரிஸ்டலில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம்-இலங்கை அணிகள் மோதுகின்றன.

மோர்தசா தலைமையிலான வங்கதேச அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. பின்னர் நடந்த ஆட்டங்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும், 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது.

கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியைத்தழுவியது. மழையால் பாதிக்கப்பட்ட 2வது ஆட்டத்தில் 34 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. மேலும்பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுஇரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

பிரிஸ்டலில் இன்றைய வானிலையைப் பொறுத்தவரை மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம்.

வங்கதேச அணி விபரம் : தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், முகமது சைபுதீன், மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.

இலங்கை அணி விபரம் : கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, திரிமன்னே, குசல் மென்டிஸ், மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, இசுரு உதனா, சுரங்கா லக்மல், மலிங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ. 

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here