இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தொடையில் ஏற்பட்ட காயத்தால் அடுத்த 3 ஆட்டங்களில் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மழை பாதிப்பு காரணமாக இந்தியாவிடம் டிஎல்எஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் எதிர்ப்பின்றிப் பணிந்தது. இந்நிலையில் பிரதான பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் மூன்றாவது ஓவர் வீசிய போது, கீழே விழுந்து தொடையில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். பின்னர் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை.

இதற்கிடையே காயத்தால் அவதிப்படும் புவனேஸ்வர் அடுத்த 3 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆட மாட்டார் என இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய கேப்டன் கோலி, புவனேஸ்வரின் காயம் தீவிரமாக இல்லை. எனினும் அவருக்கு ஓய்வு தர வேண்டியது அவசியம். 3 ஆட்டங்களுக்குள் அவர் குணமடைந்து விடுவார். முகமது ஷமி உள்ளதால், நாம் கவலை அடையத் தேவையில்லை என்று கூறினார்.

அடுத்து 3 ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் ஜூன் 22ஆம் தேதியும், மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 27ஆம் தேதியும், இங்கிலாந்து அணியுடன் 30ஆம் தேதியும் மோதவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here