இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி  தான் இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரு போட்டியில்மட்டுமே தோல்வியைத் சந்தித்திருக்கிறது. தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளை வீழ்த்திய இங்கிலாந்து அணி   2வது லீக் ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது.

காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் இந்த ஆட்டம் மற்றும் அடுத்த ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் இயான் மோர்கனின் விளையாடுவது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. ஜாசன் ராய்க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ்க்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது.

சமநிலையில் இல்லாத இரு அணிகள் ஆடுவதால் இந்த ஆட்டம் சற்று மந்தமாகவேஇருக்கும். ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இந்தப்போட்டியில் விறுவிறுப்பைஎதிர்பார்க்க முடியும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here