உலக கோப்பை கால்பந்து: 5 கோல்கள் அடித்து ரஷ்யா வெற்றி

0
400

உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷ்யாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன.உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெறுவது இது முதல்முறையாகும்.

இந்த உலக கோப்பைக் கால்பந்து விளையாட்டுகளில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. 32 நாட்களுக்கு மேல் நடக்கவுள்ள இந்த தொடரில், 64 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த போட்டிகள் ரஷ்யாவில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கவுள்ளன.

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள லூஸ்நிக்கி மைதானத்தில் நடந்த கோலாகல தொடக்க விழாவைத் தொடர்ந்து முதல் போட்டியில் ரஷ்யாவுடன் செளதி அரேபியா மோதியது. போட்டியை நடத்தும் ரஷ்யா, தரவரிசையில் 70வது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா 67வது இடத்தில் உள்ளது.

ரஷ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது. டெனிஸ் செரிஷேவ் 2 கோலையும், ஆர்டெம் டெசுயூபா 1 கோலையும், அலெக்ஸாண்டர் கொலொவின் 1 கோலையும் அடித்தனர் . இறுதியில் ரஷ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றது .

இந்த ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ரஷ்யாவின் யூரி காசின்கீ அபாரமாக பந்தை தலையால் மோதி கோலாக்கினார். இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் முதல் கோல் அடித்தப் பெருமை அவர் பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்