32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்ளும் முக்கிய விளையாட்டு திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் வியாழக்கிழமை ரஷியாவில்(ஜூன் 14-ஆம் தேதி) கோலாகலமாக ஆரம்பிக்கிறது.

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2697 கோடி ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 256 கோடி பரிசாக கிடைக்கும்.

2-வது இடத்துக்கு ரூ. 188 கோடியும், 3-வது இடத்துக்கு ரூ. 161 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ. 148 கோடியும் கிடைக்கும்.

கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ. 107 கோடியும், 2-வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ. 80 கோடியும், ‘லீக்’ சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ. 50 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்