உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் 2018; 2மடங்காக உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு

0
876

உலக அளவிலான கோடீஸ்வரர்கள் பட்டியலை ஹருன் குளோபல் வெளியிட்டுள்ளது. 68 நாடுகளிலிருந்து 2,694 கோடீஸ்வரர்களும் 2,157 நிறுவனங்களும் அந்தப் பட்டியலில் அடங்கியுள்ளன . உலக அளவில் அதிகமான கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் மொத்தம் 131 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்று அந்தப் பட்டியல் கூறுகிறது.

ஒரே வருடத்தில் மகத்தான வளர்ச்சியை கண்டவர் தொழிலதிபரும் , பிரதமர் மோடியின் நண்பருமான கவுதம் அதானி. இவருடைய சொத்துக்கள் ஒரே வருடத்தில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது அவருடைய தற்போதைய சொத்துக்களின் மதிப்பு ரூ91,245 கோடி . ஒரே வருடத்தில் இவருடைய தொழில் 109 சதவீதம் வளர்ச்சியடைந்து உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 98வது இடத்தைப் பிடித்துள்ளார் .

Screen Shot 2018-03-02 at 8.07.07 PM

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரே வருடத்தில் 73 சதவீதம் வளர்ச்சியடைந்து உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 19வது இடத்தைப் பிடித்துள்ளார் .

Screen Shot 2018-03-02 at 8.10.39 PM

இந்தக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் பேடிஎம் (PayTm) நிறுவனர் விஜய் சேகர் சர்மா, டிரக்டி (Directi) நிறுவனர் டிவ்யான்க் துராகியா, அவுட்கம் வெல்த் (Outcome Wealth ) நிறுவனர் ஸ்ரதா அகர்வால் போன்றோர்களும் அடக்கம்.

இந்தியாவில் மருந்துகள் தயாரிப்புத் துறையில் 19 கோடீஸ்வரர்களும் , ஆட்டோமொபைல்த் துறையில் 14 கோடீஸ்வரர்களும் , நுகர்வோர் தயாரிப்புத் துறையில் 11 கோடீஸ்வரர்களும் இருக்கிறார்கள். இந்தியாவில் அதிகமான கோடீஸ்வரர்கள் உள்ள மாநகரம் என்ற வகையில் டெல்லிக்கு அடுத்து மும்பை முதலிடத்தில் இருக்கிறது.

உலகின் முதல் கோடீஸ்வரராக, அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெப் பிஸோஸ் , இராண்டாமிடத்தில் வாரன் பஃபெட், மூன்றாமிடத்தில் பில் கேட்ஸ் உள்ளனர். நான்காமிடத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க், ஐந்தாமிடத்தில் எல்விஎம்எச் நிறுவனத்தின் தலைவர் பெர்நார்ட் அர்னால்ட், ஆறாமிடத்தில் இன்டிடெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் அமான்சியோ ஆர்டீகா, ஏழாவது இடத்தில் அமெரிக்கா மோவில் நிறுவனத்தின் கார்லோஸ் சிலிம் ஹெலு, எட்டாவது இடத்தில் ஆரக்கிள் நிறுவனத்தில் லாரி எலிஸன், ஒன்பதாவது இடத்தில் கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ், பத்தாவது இடத்தில் புளூம்பெர்க் நிறுவனத்தின் மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோர் உள்ளனர்.

Screen Shot 2018-03-02 at 7.43.36 PM

அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் மொத்தம் 819 கோடீஸ்வரர்களும், இரண்டாமிடத்தில் அமெரிக்காவில் 571 கோடீஸ்வரர்களும் வாழ்கின்றனர்.

Screen Shot 2018-03-02 at 7.44.02 PM

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here