[vc_facebook type=”standard”][vc_tweetmeme type=”horizontal”]

உலகக் பெருங்கடல் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . உலகக் பெருங்கடல் நாள் உலகில் உள்ள கடல்களை பாதுகாப்பதற்காகவும், மற்றும் கெளரவிக்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது.

உலகின் கடல்களால் நாம் பெறும் பயன்களை அளவிட்டுப் பார்க்கவும், அவை நமக்கு வழங்கும் கடல் உணவு வகைகள், மீன்கள், மதிப்புமிக்க பொருள்களையும், அவற்றின் பயன்களையும் நினைத்துப் பார்க்கவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. புவியின் மேற்பரப்பிலுள்ள கடல்கள் தனித்தனியானவை எனக் கருதப்பட்டாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல், இந்து மகா கடல், அண்டார்டிக் கடல், ஆர்டிக் கடல் என ஐந்து பெருங்கடல்கள் உலகில் உள்ளன.

கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமானது கடல்களின் சீரழிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. கடல்களில் பிளாஸ்டிக் குப்பையைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த ஆண்டு கடல் நாளின் மையப்பொருளாக உள்ளது.

நேரடியாகக் கடலில் பிளாஸ்டிக் குப்பை போடப்படுவது மட்டுமில்லாமல், கழிவு நீர் பாதைகள் மூலமாகவும், பெருமளவு கழிவு கடலில் கலக்கிறது. இதுபோன்ற கழிவுகள் கடலில் சேரும்போது அது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிறிய துணுக்குகளாகிவிடுகிறது. நுண் உயிரினங்களும், சிதையாத பிளாஸ்டிக் பைகளை ஆமை போன்ற உயிரினங்களும் உண்டு இறந்துவிடுவது மட்டுமல்லாமல் கடல் உணவு வழியாக மனித உடல்களுக்குள் பிளாஸ்டிக் புகுந்துவிடுகிறது.

இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டு பிளாஸ்டிக் மாசுவை ஒழிப்போம், ஆரோக்கியமான கடலை உருவாக்கும் வழியினை கண்டறிவோம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு உலகம் முழுவதும் இன்று (ஜூன் 8) பெருங்கடல் நாள் கொண்டாடப்படுகிறது.

https://twitter.com/WildlifeDay/status/1005012554798772224

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here