அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘மெர்சர்’ என்ற நிறுவனம் வாழ்க்கை நடத்துவதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களில் சென்னை 144 இட்த்தில் இருப்பதாகத் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

5 கண்டங்களை சேர்ந்த 209 நகரங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

உலகிலேயே செலவு மிகுந்த நகராக ஹாங்காங் முதலிடத்தை பிடித்துள்ளது. டோக்கியோ, ஜூரிச், சிங்கப்பூர், சியோல், ஷாங்காய், பீஜிங், பெர்ன் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

இந்தியாவிலேயே அதிக செலவு மிகுந்த நகராக மும்பை தேர்வாகி உள்ளது. உலக அளவில் அந்நகரம் 55-வது இடத்தில் உள்ளது. சென்னை 144-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி 103-வது இடத்திலும், பெங்களூரு 170-வது இடத்திலும், கொல்கத்தா 182-வது இடத்திலும் உள்ளன.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

இதையும் படியுங்கள்