உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக தற்போது சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு 138 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 2 வது இடத்தை 133 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா உள்ளது.

ஆனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா கடும் முயற்சிகளை எடுத்தது. முயற்சிகள் கைகொடுக்கவே, அங்கு மக்கள் தொகையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் அது

முழுமையான பலனைக் கொடுக்கவில்லை. இங்கு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.

2027 ல் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறி விடும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய வளர்ச்சி விகிதங்கள் அடிப்படையில் கணக்கிட்டு பார்க்கும் போது,  இந்தியா அதிக மக்கள் தொகையையுடன் முதலிடத்தை எட்டி விடும் என்று தெரிய வந்துள்ளது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அதே நேரத்தில் வட மாநிலங்களில் கட்டுப்படுத்த முடியவில்லை.

தென்மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.8 என்ற அளவில் இருக்கிறது. அதே நேரத்தில் வடமாநிலத்தில் 2.3 என்ற அளவில் உள்ளது.

குறிப்பாக ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவிலும் நைஜீரியாவிலும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த இரு நாடுகளிலும் அடுத்த 30 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரிப்பது, மிக, மிக அதிக அளவில் இருக்கும். இவ்வாறு ஐ.நா. சபை அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

ஆனாலும், இந்தியா தொடர்ந்து எடுத்து வரும் முயற்சியின் காரணமாக 2065ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் மக்கள் தொகை குறைய ஆரம்பிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here