Bucherer-Harley-Davidson-Blue-Edition-Custom-Motorcycle-by-Bundnerbike-2018
ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் பைக்குகள் இந்தியாவில் விலை 4 லட்சம் முதல் 13 லட்சம் வரை விலை வேறுபடும்.
அவரவர் விருப்பத்துக்குத் தக்கவாறு பைக்கில் இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறும், கஸ்டமர்களின் வாங்கும் திறனைப் பொருத்தும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்கேற்ப பைக்குகளின் விலை நிர்ணயிக்கப்படும்.
Harley-Davidson-Blue-Edition-Feature-Image
அமெரிக்கன் க்ரூஸர் நிறுவனம், சுவிஸ் வாட்ச் மற்றும் ஆபரணத் தயாரிப்பு நிறுவனமொன்றுடன் கூட்டணி வைத்து தனது புதிய மாடல் ஹார்லி டேவிட்ஸன் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் எடிஷன் வெளியிடப்பட்டதன் முக்கிய நோக்கமே சுவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள ப்ளூ எடிஷன் அதி நவீன வாட்ச்களை புரமோட் செய்வதற்காகத் தான் என்பதால் புது ஹார்லி டேவிட்ஸன் ப்ளூ எடிஷன் பைக்கில் வைரங்கள் பதிக்கப்பட்ட வாட்ச் பொருத்தப்பட்டுள்ளது .
இதில் அதி நுட்பமான வேலைப்பாடுகள் செய்யவேண்டி இருந்ததால் இந்த பைக்குகள் மொத்தமும் மனிதக் கரங்களால் மட்டுமே அடித்துத் தட்டி, நீட்டி, வெல்டிங் செய்யப்பட்டு பாலீஷ் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

அமெரிக்க க்ரூஸர் நிறுவனம், சுவிஸ் வாட்ச் மற்றும் ஆபரணத்தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து உருவாக்கியுள்ள இந்த எக்ஸ்க்ளூசிவ் ப்ளூ எடிஷன் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகளின் விலை சுமார் 12 கோடி என்கிறார்கள். இந்த பைக்குகள் இப்போதைக்கு இந்தியாவில் விற்பனைக்கு இல்லை.

பைக்குகள் என்று சொல்வதை விட ஒரே ஒரு பைக் என்று தான் சொல்லவேண்டும். ஆம் இந்த ப்ளூ எடிஷன் ஹார்லி டேவிட்ஸன் பைக் ஒன்று மட்டுமே இப்போதைக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னோட்டமாக சுவிஸ் தலைநகர் ஜூரிச்சில் இந்த பைக்குகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Harley-Davidson-Blue-Edition-2
இந்த வண்டியை வாங்கும் சொந்தக்காரர்களுக்கு பிரத்தியேகமாக இந்த வண்டிக்காக வடிவமைக்கப்பட்ட பர்தர் யுனிக் கார்ல் எஃப்.புச்சரர் ( further unique Carl F. Bucherer )கைக் கடிகாரங்களும் கிடைக்கும்.
Bucherer-Blue-Edition-Patravi-TravelTec-II-Watch-

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்