பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது நாட்டிற்கே அவமானம் என்று ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.

அதிகப்படியான பாலியல் வன்முறை மற்றும் அடிமைத் தொழில் ஆகியவற்றின் காரணமாக உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண்கள் தொடர்பான விவாகரங்களில் வல்லுனர்களாக கருதப்படும் 550 பேரைக் கொண்டு தாம்சன் ராய்ட்டர்ஸ் (Thomson Reuters Foundation) ஃபௌண்டேஷன் நடத்திய ஆய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிடப்பட்டது. அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, வீட்டு வேலைக்காக ஆள் கடத்துதல், கட்டாயத் தொழில், கட்டாயத் திருமணம் மற்றும் பாலியல் அடிமை போன்ற காரணங்களுக்காக பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

அமில வீச்சு, பெண்ணுறுப்பு சிதைப்பு, குழந்தைத் திருமணம், உடல் ரீதியான துன்புறுத்தல் ஆகியவைக் காரணம் காட்டி பெண்களை பாதிக்கும் கலாச்சார பாரம்பரியங்களும் இந்தியாவில் தான் அதிகம் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட இதே ஆய்வில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்திருந்தது.

உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள்:
1. இந்தியா
2. ஆஃப்கானிஸ்தான்
3. சிரியா
4. சோமாலியா
5. சவுதி அரேபியா
6. பாகிஸ்தான்
7. காங்கோ ஜனநாயக குடியரசு
8. ஏமென்
9. நைஜீரியா
10. அமெரிக்கா

இந்த ஆய்வுக் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்

பிரதமர் மோடி தோட்டத்தில் யோகா செய்வதை வீடியோவாக்கும் வேளையில் அதிகப்படியான பாலியல் வன்முறை மற்றும் அடிமைத் தொழில் ஆகியவற்றின் காரணமாக உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான், சிரியா, சவுதி அரேபியா நாடுகளை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இது நாட்டிற்கே மிகப்பெரிய அவமானம் ” என்று டிவீட் செய்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here