உலகிலேயே இந்தியாவில் அதிகமான குழந்தைகள் மரணம் ; 2017இல் 8லட்சம்; 2018இல் 8.8 லட்சம் – யுனிசெஃப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0
362

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணத்தில் 69 சதவிகிதம் ஊட்டத் சத்து குறைவால் நிகழ்வதாக யுனிசெஃப்’ தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் போதிய ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைக்காமல் இறக்கும் குழந்தைகள் பற்றிய அறிக்கையை,  அக்டோபர் 15-ஆம் தேதி ‘யுனிசெஃப்’ அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில், உலகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 65 சதவிகிதம் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படுவதாகவும், இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணத்தில், 69 சதவிகிதம் ஊட்டத்சத்து குறைவால் நிகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு 8 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல் வறுமையில் வாடும் நைஜீரியாவில் குழந்தைகளின் இறப்பு 8 லட்சத்து 66 ஆயிரம் எனவும், இதையடுத்து பாகிஸ்தானில் 4 லட்சத்து 9 ஆயிரம் இறப்புகள் என பதிவாகியுள்ளன. டெமாக்ரெட்டிக் ரிபப்ளிக் ஆஃப் காங்கோவில் 2 லட்சத்து 96ப் ஆயிரம் குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 1 லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளும், இறந்திருக்கின்றனர். (5 வயதுகுட்பட்ட குழந்தைகள் இறப்பில் ) பிறக்கும் 1000 குழந்தைகளில் 37 பேர் இறக்கின்றனர். நைஜீரியாவில் 1000க்கு 120 குழந்தைகளும் , பாகிஸ்தானில் 1000க்கு 69 குழந்தைகளும், காங்கோவில் 1000க்கு 88 குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 1000க்கு 55 குழந்தைகளும் இறந்திருக்கின்றனர்.   

உலகிலேயே இந்தியாவில் தான் அதிக குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

2017 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 800000 (8 லட்சம் ) குழந்தைகள் இறந்துள்ளனர். அதாவது தினமும் 2200 குழந்தைகள் இறந்துள்ளனர். மோடி அரசு இந்தத் தகவலை வெளியிடவில்லை. ஐநா வெளியிட்டது.

இந்தத் தகவலை State of the World’s Children 2019 என்ற தலைப்பில் யுனிசெஃப் வெளியிட்டுள்ளது. உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 102 வது இடத்தில் இருக்கும் நிலையில்  யுனிசெஃப் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது . 

இந்தியாவில் உள்ள குழந்தைகளில் குறைந்த எடை, அதிக எடை, ஊட்டச்சத்து குறைபாடுஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். தெற்கு ஆசியாவிலேயே இவற்றை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்கு அவர்களின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கான உணவுகள் வழங்கப்படுவதில்லை” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 டென்மார்க் , ஐயர்லாந்து , மொரீஷியஸ், கத்தார், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புகள் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது . 

http://scroll.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here