ஜான்பூரில்‌ நடைபெற்ற தேர்தல்‌ பிரசாரக்‌ கூட்டத்தில்‌ அகிலேஷ்‌ யாதவ்‌ பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில்‌ சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால்‌, அரசுப்‌ பணிகளுக்கான வயது வரம்பு தளர்த்தப்படுவதுடன்‌, காவல்‌ துறையில்‌ காலி இடங்களும்‌ நிரப்பப்படும்‌.

பாஜக, எங்களை குடும்பக்‌ கட்சி என்று கேலியாக கூறி வருகிறது. நாங்கள்‌ குடும்பக்‌ கட்சியை சேர்ந்தவர்கள்‌ தான்‌ என்பதை ஏற்றுக்கொள்கிறோம்‌. அதில்‌ எங்களுக்கு எந்தத்‌ தயக்கமும்‌ இல்லை.

விவசாயிகளின்‌ வருவாய்‌ இரட்டிப்பாக்கப்படும்‌ என்று வாக்குறுதி அளித்து கடந்த 2017ஆம்‌ ஆண்டில்‌ உத்தர பிரதேசத்தில்‌ பாஜக ஆட்சியைக்‌ கைப்பற்றியது. ஆனால்‌, பாஜக அரசின்‌ தவறான கொள்கைகளால்‌ விவசாயிகளின்‌ வருமானம்‌ இரட்டிப்பாகவில்லை. உண்மையில்‌, அது பாதியாகக்‌ குறைந்துவிட்டது.

பாஜக தன்னை உலகின்‌ மிகப்‌ பெரிய கட்சி என்று அழைக்கிறது. தன்னுடைய ஐந்தாண்டு கால ஆட்சியில்‌ இக்கட்சி மக்களுக்கு ஆற்றிய பணிகளையும்‌, அளித்த வாக்குறுதிகளையும்‌ பகுப்பாய்வு செய்தால்‌, உலகின்‌ மிகப்‌ பெரிய பொய்யர்‌ கட்சி பாஜக தான்‌ என்பது தெரிய வரும்‌.

கொரோனா பரவல்‌ காலங்களில்‌ பாஜகவின்‌ தவறான நிர்வாகத்தால்‌ மக்கள்‌ கடும்‌ சிரமங்களைச்‌ சந்திக்ககொ நேர்ந்தது. பொது ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களுக்குச்‌ சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்‌ உ.பி.யில்‌ உள்ள தங்களது சொந்த ஊருக்கு நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்‌.

அவ்வாறு வந்த பலரும்‌ வழியிலேயே உயிரிழந்தனர்‌. அப்போது, சமாஜ்வாதி கட்சிதான்‌ அந்த மக்களுக்கு உதவி புரிந்தது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்‌ வீடு திரும்பியபோது, அவர்களை அரசு கண்டு கொள்ளாமல்‌ கண்மூடி இருந்தது.

கொரோனா பரவல்‌ உச்சம்‌ பெற்ற காலத்தில்‌ போதுமான மருந்துகளையும்‌, படுக்கைகளையும்‌ பாஜக அரசால்‌ வழங்க முடியவில்லை. அவர்கள்‌ சரியான நேரத்தில்‌ மருந்துகளையும்‌, ஆக்சிஜனையும்‌ அளித்திருந்தால்‌ பல உயிர்களைக்‌ காப்பாற்றியிருக்க முடியும்‌.

கரோனா தொற்று காலத்தில்‌ ஆள்சேர்ப்பு தேர்வுகள்‌ நடைபெறாததால்‌ பல இளைஞர்கள்‌ அதில்‌ கலந்து கொள்ள முடியாமல்‌ வயது வரம்பைத்‌ தாண்டி விட்டனர்‌. எனவே, இந்த இளைஞர்களின்‌ நலன்‌ கருதி அரசுப்‌ பணிகளில்‌ அவர்களது வயது வரம்பு தளர்த்தப்படும்‌. மேலும்‌, ராணுவ ஆள்சேர்ப்பில்‌ இணையவும்‌ வயது வரம்பில்‌ தளர்வு அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்‌ என்றார்‌.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here