உலகின் முதல் ”சோலார் சாலை” பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நார்மண்டி பகுதியில் உள்ள டோரோவேர் பெர்சி (Tourouvre-au-Perche) சாலையில் உள்ள தெரு விளக்குகள் எரிவதற்கு தேவையான சக்தியை தரும் வகையில் சோலார் சாலை அமைக்கப்பபட்டுள்ளது. இதன் மூலம் உலகின் முதல் சோலார் சாலை என்ற பெருமை இச்சாலை பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரி செகோலென் இதனை திறந்துவைத்தார். சூரியசக்தி பெறுவதற்கு சோலார் பேனல்கள் 30,000 சதுர அடிக்கு 5.2 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை அமைப்பதற்காக ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது.

இதையும் படியுங்கள் : ஸ்மார்ட் சிட்டி என்றால் என்ன? : நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஏழு விஷயங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்