உலகின் மிகவும் வேகமான கார்

0
246

உலகின் மிக வேகமான கார் எனப்படும் ப்ளட்ஹான்ட் காரின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் ப்ளட்ஹவுன்ட் என்று பெயரிடப்பட்ட காரினைத் தற்போது தயாரித்துள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரம் குதிரைத் திறன் கொண்ட இந்தக் கார் மணிக்கு ஆயிரத்து 227 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது.

டைபூன் என்ற போர் விமானத்தின் என்ஜின் பொருத்தப்பட்ட இந்தக் காரின் சோதனை ஓட்டம் ஆப்பிரிக்காவின் ஹக்ஸ்கீன்பன் பாலைவனத்தில் நடத்தப்பட்டது.

தற்போது மணிக்கு 537 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட இந்தக் கார் அடுத்து வரும் வாரங்களில் மணிக்கு 800 கிலோ மீட்டர் வேகத்திலும் இறுதியில் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here