உலகின் மிகப் பெரிய பணக்காரரான அமேசான் நிறுவனர் விவாகரத்து – 35 பில்லியன் டாலர்கள் (ரூ2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) இழப்பீடாக வழங்குகிறார்

0
323

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமோசன் நிறுவனரும், உலகின் மிகப் பெரிய பணக்காரருமான  ஜெஃப் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை (35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ) இழப்பீடாக வழங்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்.

எனினும், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய இணையதள வணிக நிறுவனமான அமேசானில் மெக்கின்ஸிக்கு உள்ள நான்கு சதவீத பங்கை அவர் தொடர்ந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெஃபுக்கு சொந்தமான விண்வெளி சுற்றுலா நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கை கைவிடுவதற்கு மெக்கன்சி முடிவெடுத்துள்ளார்.

இருவரின் தார்மீக ஆதரவுடன் எங்களது மண முறிவு செயல்பாடு முடிவடைந்துள்ளது” என்று மெக்கின்ஸி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கணவர் ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் 4 சதவீத பங்குகளை மட்டும் பெற்றுக்கொள்ள  மக்கன்ஸி ஒப்புக் கொண்டார். இதையடுத்து இருவரும் விவகாரத்து சொத்து உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இதன்படி அமேசான் நிறுவனத்தில் தான் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் 75 சதவீதத்தை பெசோஸ் தொடர்ந்து வைத்துக் கொள்வார். அதேசமயம் மீதமுள்ள 25 சதவீதத்தை மட்டும் மக்கனிஸி பெறுகிறார். இதன் மூலம் அமேசான் நிறுவனத்தில் பெசோஸூக்கு 12 சதவீத பங்குகளும், மக்கன்ஸிக்கு 4 சதவீத பங்குகளும் என பிரிக்கப்பட்டுள்ளது.

இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக மக்கன்ஸி தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி வாஷிங்டன் போஸ்ட் உட்பட மற்ற நிறவனங்களில் உள்ள தனது பங்குகளையும் கணவர் பெசோஸூக்கு விட்டுக் கொடுக்க அவர் முன் வந்துள்ளார்.

அமேசான் பங்குகளில் 4 சதவீதம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும். இதற்கு முன்புவரை, கலை வியாபாரி அலெக் வொலின்ஸ்டைன் மற்றும் அவரது மனைவி ஜோசலினுக்கிடையேயான 3.8 பில்லியன் விவாகரத்து இழப்பீடு உலகளவில் அதிகமானதாக கருதப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here