உலகின் மிகப் பழமையான கால்சட்டை (பேன்ட்) ஒன்று தொல்பொருள் ஆராய்ச்சியின்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கால்சட்டை 3,0000 ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த கால்சட்டை மேற்கு சீனாவில் 1000 – 1200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட மனிதனுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், உலகின் மிகப் பழமையான இந்தக் கால்சட்டையில் உள்ள வடிவங்கள் மற்றும் நூல் நெய்த தன்மையில் உள்ள அறிவியல் மற்றும் பொறியியல் தன்மை குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளரான கியான் என்.ஸ்மித் என்பவர் விரிவான கட்டுரை எழுதியுள்ளார். 

இதையும்  படியுங்கள்👇அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, உலகின் மிகப் பழமையான கால்சட்டை மேற்கு சீனப் பகுதியைச் சேர்ந்த மக்களுடையது. குதிரையேற்றப் பயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்காக இந்தக் கால்சட்டை பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.

செம்பறி ஆட்டு தோல் மூலம் நான்கு விதமான முறைகளைப் பயன்படுத்தி இந்த கால்சட்டையை முன்னோர்கள் நெய்துள்ளனர். இதனால் கால்சட்டையின் நுழைவுத் தன்மை, காலின் சில பகுதிகளில் உள்ள மென்மைத்தன்மைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குதிரையேற்றத்தின்போது கால்சட்டை கிழியாமல் இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தை ஒப்பிடும்போது தற்காலத்தில் பெரும்பாலானோர் கால்சட்டைக்காக முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ள கியான், உலகின் பல பகுதிகளில் போர் வீரர்களும், குதிரையேற்ற வீரர்களும், மலையேற்ற பயணம் மேற்கொள்பவர்களும் தங்களது கால்சட்டைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

Examples of the different weaving techniques and colorful motifs woven into the 3,000-year-old Turfan pants.
3,000 ஆண்டுகள் பழமையான டர்ஃபான் பேண்ட்களில் நெய்யப்பட்ட வெவ்வேறு நெசவு நுட்பங்கள் மற்றும் வண்ணமயமான உருவங்களின் எடுத்துக்காட்டுகள்.

போரின்போதும், குதிரை ஏறும்போதும் கால்சட்டை கிழியாத வகையிலும், கச்சிதமாகவும், நீண்ட நேரம் உடுத்திக்கொண்டிருக்கும் வகையிலும் அவர்களது கால்சட்டைகள் தயாரிக்கப்படும்.

அந்தவகையில் 3,000 ஆண்டுகள் பழமையான இந்த கால்சட்டையில் நான்கு விதமான டிசைன்களில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணியை நெய்யும் முறையிலேயே இந்த வேறுபாட்டு காட்டப்பட்டுள்ளது. 

முட்டி மற்றும் பின்னங்கால் பகுதிகளில் வித்தியாசமான முறைகளில் கால்சட்டையை முன்னோர்கள் நெய்துள்ளனர். இந்த முறை டேப்சரிசி என்றழைக்கப்படுகிறது. இந்த முறை நெய்தலின் மூலம் குறைந்த அளவே நுழைவுத்தன்மை இருந்தாலும் அப்பகுதியை மிகுந்த கனமுடையதாகும். இடுப்புப் பகுதிகளில் வேறு வகையான நெய்தல் முறை பின்பற்றப்பட்டுள்ளது. இந்த முறையில் கனமான தன்மையையும், கால்சட்டை இறங்காதபடிக்குத் தேவையான இறுக்கத்தையும் கொடுக்கிறது. இவ்வாறு நான்கு வகையான நெய்தல் முறைகளில் இந்த பழமையான கால்சட்டை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தப் பகுதியிலும், துணியை வெட்டியதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் கியான் குறிப்பிட்டுள்ளார். 

இதையும்  படியுங்கள்👇Courtesy: dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here