உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஓக் ரிடேஜ்(Oak Ridge) தேசிய சோதனைக்கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளனர்.

சம்மிட்(Summit) என பெயரிப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்த சூப்பர் கம்ப்யூட்டரை விட 8 மடங்கு அதிக திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் கணக்குகளை ஒரு நொடியில் 3 பில்லியன் வேகத்தில் துல்லியமான முறையில் தீர்த்து வைக்கும்.

ஒரு நிமிடத்திற்கு 2 லட்சம் டிரில்லியன் கணக்குகளுக்கு தீர்வு காணும் திறன் கொண்டது. உயர்திறன் கொண்ட பொருட்கள், ஆற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளை கொண்டு இந்த சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் 4 ஆயிரம் சர்வர்கள் மற்றும் இரண்டு பிராசஸ்ர்கள் மற்றும் 6 ஆக்சிலேட்டர்கள் உள்ளன. இது 10 மெகாபைட் தகவல்களை சேகரித்து வைக்கும் திறன் கொண்டது.

அதிவேக திறன் கொண்ட இந்த கம்ப்யூட்டர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் விபரங்களுக்கு : cnbc

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here