உலகளவில் 8.61 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி

0
243

உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 58 லட்சத்து 89 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 69 ஆயிரத்து 921 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நேற்று 41 ஆயிரத்து 579 பேருக்கும், பிரேசிலில் 49 ஆயிரத்து 889 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், உலகம் முழுவதும் 2 கோடியே 58 லட்சத்து 89 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 68 லட்சத்து 58 ஆயிரத்து 211 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 112 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

அமெரிக்கா – 62,57,171

பிரேசில் – 39,52,790

இந்தியா – 36,91,167 

ரஷியா – 10,00,048

பெரு – 6,57,129

தென் ஆப்பிரிக்கா – 6,28,259

கொலம்பியா – 6,24,069

மெக்சிகோ – 5,99,560

ஸ்பெயின் – 4,70,973

அர்ஜெண்டினா – 4,28,239

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

அமெரிக்கா – 1,88,874
பிரேசில் – 1,22,681
இந்தியா – 65,288
மெக்சிகோ – 64,414
இங்கிலாந்து – 41,504
இத்தாலி – 35,491
பிரான்ஸ் – 30,661
ஸ்பெயின் – 29,152
பெரு – 29,068
ஈரான் – 21,672

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:

அமெரிக்கா – 34,84,579
பிரேசில் – 31,59,096
இந்தியா – 28,39,882
ரஷியா – 8,15,705
தென் ஆப்ரிக்கா – 5,49,993
பெரு – 4,71,599
கொலம்பியா – 4,69,557
மெக்சிகோ – 4,16,738

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here