1. உலகளவில் மின் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்திலுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் உற்பத்தியின் அளவு 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ஐபிஇஎஃப் (India Brand Equity Foundation – IBEF) எனப்படும் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2017 ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 1003.535 பில்லியன் யூனிட்ஸ் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. கடந்த 2017ஆம் ஆண்டு நிதியாண்டில் இந்தியாவில் 1,160.10 பில்லியன் யூனிட்ஸ் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் யூனிட்ஸ் அளவானது, 10 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானது. ஒவ்வொரு வீட்டிற்கும் தினமும் சராசரியாக மூன்று யூனிட் மின்சாரம் செலவிடப்படுகிறது.

4. மின் உற்பத்தியில் கடந்த 2016ஆம் ஆண்டில் உலகளவில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்நாடு 6,015 பில்லியன் யூனிட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 4,327 பில்லியன் யூனிட்ஸ்களும், இந்தியா 1,423 பில்லியன் யூனிட்ஸ்களும் உற்பத்தி செய்துள்ளது. நான்காவது இடத்தில் ரஷ்யாவும், ஐந்தாவது இடத்தில் ஜப்பானும் உள்ளன.

5. கடந்த 2010ஆம் ஆண்டில் 771.6 பில்லியன் யூனிட்ஸ்களும், 2014ஆம் ஆண்டில் 967.2 பில்லியன் யூனிட்ஸ்களும், 20116ஆம் ஆண்டில் 1107.8 பில்லியன் யூனிட்ஸ்களும், 2017ஆம் ஆண்டில் 1,160.10 பில்லியன் யூனிட்ஸ்களும் இந்தியா உற்பத்தி செய்துள்ளது.

நன்றி: indiaspend.com

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children