உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.74 கோடியாக உயர்வு

The global tally of coronavirus cases stands at 37,458,924. While 28,111,512 have recovered, 1,077,428 have died so far. The US, the worst-hit country, has 7,945,505 cases. It is followed by India, which has 7,051,543 cases, Brazil (5,091,840) and Russia (1,285,084).

0
138

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.74 கோடியாக உயர்ந்துள்ளது.  இதுவரை 3,74,67,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 2, கோடிய 81 லட்சத்து 12 ஆயிரத்து 552 பேர் மீண்டுள்ளனர். 

சா்வதேச அளவில் 82,77,845 போ் சிகிச்சையில் உள்ளனா். அவர்களில் 68, 632 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலக நாடுகளிலேயே அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான தினசரி கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2-ஆம் தேதிதான் உலக அளவில் அதிகபட்ச தினசரி கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில் மட்டும் 3,30,340 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

 • அமெரிக்கா – 7,945,505
 • இந்தியா -7,051,543
 • பிரேசில் – 5,091,840
 • ரஷியா – 1,285,084
 • கொலம்பியா – 902,747
 • ஸ்பெயின் – 890,367
 • பெரு – 846,088
 • அர்ஜெண்டினா – 883,882
 • மெக்சிகோ – 814,328
 • தென் ஆப்பிரிக்கா – 690,896   

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

 • அமெரிக்கா – 219,282    
 • பிரேசில் – 150,236
 • இந்தியா – 108,371
 • மெக்சிகோ – 83,642
 • இங்கிலாந்து – 42,760     
 • இத்தாலி – 36,140

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்டநாடுகள்:

 • இந்தியா – 6,074,863
 • அமெரிக்கா – 5,089,842
 • பிரேசில் – 4,453,722   
 • ரஷியா – 1,016,202
 • கொலம்பியா – 783,131
 • ஈரான் – 403,950  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here