கார் உற்பத்தியில் உலகளவில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் போக்குவரத்துக்கு கார்களை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தனிநபர் ஒருவர் தனது சொந்த பணத்திற்காக, ஒருவர் மட்டும் கார்களில் செல்வதால்தான் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் கார் என்பது அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது.

இதற்காக, கார் உற்பத்தி நிறுவனங்களும் பொதுமக்களை கவரும் வகையில் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. புதிய கார் நிறுவனங்களும் இந்தியாவில் செயல்பட தொடங்கி வருகிறது. இந்நிலையில், UK-வில் உள்ள மணிஷேக் என்ற அமைப்பு உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடத்தி கார்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், உலகளவில் சீனா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆண்டுக்கு 25.7 மில்லியன் கார்களை உற்பத்தி செய்யும் சீனா, நிமிடத்துக்கு 48.9 கார்களை உற்பத்தி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. நிமிடத்துக்கு 8.6 கார்களை உற்பத்தி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் உற்பத்தியில் முதல் 5 இடங்களைப் பிடித்த நாடுகளின் பட்டியல்:

1. சீனா – நிமிடத்துக்கு 48.9 கார்.
2. அமெரிக்கா – நிமிடத்துக்கு 20.7 கார்.
3. ஜப்பான் – நிமிடத்துக்கு 18.4 கார்.

4. ஜெர்மனி – நிமிடத்துக்கு 8.9 கார்.
5. இந்தியா – நிமிடத்துக்கு 8.6 கார்.

இதேபோல், உலகளவில் அதிக கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 20 நிறுவனங்களில் டொயோட்டா நிறுவனம் நிமிடத்திற்கு 19.9 கார்களை உற்பத்தி செய்து முதல் இடத்தில் உள்ளது. மேலும், ஜப்பானைச் சேர்ந்த கார் உற்பத்தியாளர்களான டொயோட்டா மற்றும் லெக்சஸ் ஆண்டுக்கு 10.4 மில்லியன் கார்களை உற்பத்தி செய்கின்றனர்.

கார் தயாரிப்பில் முதல் 5 இடங்களைப் பிடித்த நிறுவனங்கள்

. டொயோட்டா – நிமிடத்துக்கு 19.9 கார்.
2. வோல்க்ஸ்வாகன் – நிமிடத்துக்கு  19.8 கார்.
3. ஹூண்டாய் – நிமிடத்துக்கு  13.7 கார்.
4. ஜெனரல் மோட்டார்ஸ் – நிமிடத்துக்கு 13.0 கார்.
5. ஃபோர்டு – நிமிடத்துக்கு 12.2 கார்.

கார் நிறுவனங்களில் அதிக வருவாய் ஈட்டும் பட்டியலிலும் டொயோட்டா மற்றும் வோல்க்ஸ்வாகன் நிறுவனங்கள் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளனர். அதன்படி இரு நிறுவனங்களும் நிமிடத்துக்கு 5 லட்சம் டாலர்களை வருவாயாக ஈட்டுகின்றன. இருப்பினும், இரு நிறுவனங்களும் ஈட்டும் வருவாய் எப்போதும் நிலையாக இருப்பதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் அடிப்படையில் முதல் 5 இடங்களைப் பிடித்து நிறுவனங்கள்:

1. டொயோட்டா – $533,676

2. வோல்ஸ்க்ஸ்வாகன் – $523,592

3. டைம்லர் – $359,970

4. ஃபோர்டு – $ 285, 198

5. ஹோண்டா – $270,928

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here