உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்த நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் நேற்று(செவ்வாய்க்கிழமை) 27 ஆயிரத்து 412 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், பிரேசிலில் 17 ஆயிரத்து 330 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 77 லட்சத்து 20 ஆயிரத்து 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 70 லட்சத்து 11 ஆயிரத்து 978 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 311 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 98 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,133 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்து 802 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:
அமெரிக்கா – 65,13,082
இந்தியா – 42,80,423
பிரேசில் – 41,65,124
ரஷியா – 10,35,789
பெரு – 6,91,575
கொலம்பியா – 6,79,513
தென் ஆப்பிரிக்கா – 6,40,441
மெக்சிகோ – 6,37,509
ஸ்பெயின் – 5,34,513
அர்ஜெண்டினா – 5,00,034
கொரோனாவுக்கு அதிகஉயிரிழப்பை சந்தித்த நாடுகள்:
அமெரிக்கா – 1,94,011
பிரேசில் – 1,27,517
இந்தியா – 71,642
மெக்சிகோ – 67,781
இங்கிலாந்து – 41,586
இத்தாலி – 35,563
பிரான்ஸ் – 30,764
ஸ்பெயின் – 29,594
பெரு – 29,976
ஈரான் – 22,542
கொலம்பியா – 21,817
கொரோனாவில் இருந்துஅதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:
அமெரிக்கா – 37,91,503
பிரேசில் – 33,97,234
இந்தியா – 33,23,951
ரஷியா – 8,50,049
தென் ஆப்ரிக்கா – 5,67,729
கொலம்பியா – 5,41,462
பெரு – 5,22,251
மெக்சிகோ – 4,46,715