உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 27 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 9 கோடியே27 லட்சத்து 28 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 லட்சத்து 24 ஆயிரத்து 475 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவற்றில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 446 பேருக்கும், பிரேசிலில் 61 ஆயிரத்து 822 பேருக்கும், இங்கிலாந்தில் 47 ஆயிரத்து 525 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுப் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 85 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 3 ஆயிரத்து 792 பேரும், இங்கிலாந்தில் 1 ஆயிரத்து 564 பேரும், பிரேசிலில் 1 ஆயிரத்து283 பேரும், ஜெர்மனியில் 1 ஆயிரத்து201 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 62 லட்சத்தை கடந்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 44 லட்சத்து 70 ஆயிரத்து 701 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 671 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 6 கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 19 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:
அமெரிக்கா- 2,35,97,138
இந்தியா- 1,04,95,147
பிரேசில்- 82,57,459
ரஷியா- 34,71,053
இங்கிலாந்து- 32,11,576
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:
அமெரிக்கா – 3,93,622
பிரேசில் – 2,06,009
இந்தியா – 1,51,529
மெக்சிகோ – 1,35,682
இங்கிலாந்து – 84,767
இத்தாலி – 80,326
பிரான்ஸ் – 69,031
ரஷியா – 63,370
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:
அமெரிக்கா – 1,39,71,321
இந்தியா – 1,01,29,111
பிரேசில் – 72,77,195
ரஷியா – 28,54,088
துருக்கி – 22,27,927