கொரோனா தொற்று பரவலால் உலகளவில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ் உலகிற்கு புதியது என்பதால், இதனைக் கட்டுப்படுத்த நம்மிடம் தடுப்பூசி எதுவும் இல்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி தயாராக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறி வருகிறது.

அதுவரை உயிரிழப்பைக் கட்டுப்படுத்த பிளாஸ்மா தெரபி உள்ளிட்ட சிகிச்சை முறைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் மற்றொரு பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றமும் கொரோனா தொற்றுநோயை போல மிக மோசமானது என எச்சரித்துள்ளார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கொரோனாவால் ஏற்படும் அழிவைப் பாருங்கள்.  கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை கட்டுப்படுத்தாவிட்டால் தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடியை மீண்டும் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

கொரோனா உயிரிழப்புகளுடன் ஒப்பிட்டு காலநிலை பிரச்சனைகளை அவர் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது , தோராயமாக 1 லட்சம் மக்களில் 14 பேர் கொரோனாவால் உயிரிழக்கிறார்கள்.

அதிகரித்து வரும் வெப்பநிலையால் அடுத்த 40 ஆண்டுகளில், 2060ம் ஆண்டு இதே உயிரிழப்பு விகிதத்தை காண வாய்ப்புள்ளது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் அதிகபட்சமாக 1 லட்சம் பேரில் 73 பேர் உயிரிழக்கக்கூடும்.

குறைந்தபட்சமாக 1 லட்சம் பேரில் 10 பேர் உயிரிழக்கக்கூடும். கொரோனாவை விட காலநிலை மாற்றத்தால்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதார நெருக்கடியும் தற்போது உள்ளது போல் மோசமாக இருக்கும். காலநிலை மாற்றத்தை சமாளிக்க அரசுகள் அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் என்றும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here