உலகத்திலேயே நான்தான் மகிழ்ச்சியான பொண்ணு

0
307

அதிகாரப்பூர்வமாக நான்தான் உலகத்திலேயே மகிழ்ச்சியான பெண் என்று ட்வீட் செய்திருக்கிறார் சமந்தா. ஏன்?

பொதுவாக திருமணம் முடிந்தால் நடிகைகள் அண்ணி, அக்கா வேடத்துக்கு தயாராக வேண்டியிருக்கும். ஆனால், சமந்தா திருமணமான பிறகும் நாயகியாக இளம் நடிகர்களுடன் நடிக்கிறார். அதுவும் குறுகிய இடைவெளியில் மூன்று சூப்பர் ஹிட்கள்.

மார்ச் 30 ஆம் தேதி சமந்தா நடிப்பில் ரங்கஸ்தலம் தெலுங்குப் படம் வெளியானது. படம் பிளாக் பஸ்டர். மே 9 ஆம் தேதி மகாநதி தெலுங்குப் படம் வெளியானது. படம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளுடன் பிரமாதமாக ஓடுகிறது. அதேபடம் நேற்று தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் இரும்புத்திரை படத்திலும் சமந்தாவே நாயகி. ஆக, சமந்தாவின் கடைசி மூன்று படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதனை குறிப்பிட்டு,

அதிகாரப்பூர்வமாக நான்தான் இந்த உலகிலேயே மகிழ்ச்சியான பெண் என்று ட்வீட் செய்துள்ளார்.

உண்மைதான்.

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்