32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்ளும் முக்கிய விளையாட்டு திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் வியாழக்கிழமை ரஷியாவில் (ஜூன் 14-ஆம் தேதி) கோலாகலமாக ஆரம்பிக்கிறது.

மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் ரூ.87 ஆயிரம் கோடி செலவில் உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு மைதான வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரஷிய அரசு செய்துள்ளது.

உலகம் முழுவதும் இருந்து 1 கோடி ரசிகர்கள இதற்காக பயணம் மேற்கொள்வர் என கணிக்கப்பட்டுள்ளது. துவக்க விழா மாஸ்கோவின் லூசினிக்கி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

உலகக் கோப்பை கால்பந்து 2018 தொடக்க விழாவில் பிரபல கலைஞர்கள் கலந்து கொண்டு இசைநிகழ்ச்சியை நடத்துகின்றனர்.3 பிரபல கலைஞர்களான ராபி வில்லியம்ஸ், அய்டா கரிஃபுல்லினா, ரொனால்டோ ஆகியோர் பங்கேற்று இசைநிகழ்ச்சி நடத்துகின்றனர். மேலும் உள்ளூரைச் சேர்ந்த 500 கலைஞர்களும் தங்கள் திறமையை சுமார் 30 நிமிடங்கள் வெளிப்படுத்துகின்றனர். இதில் நடனக் கலைஞர்கள், ஜிம்னாஸ்டிக்ஸ், இசைக்கலைஞர்கள் இடம் பெற்றிருப்பர்.

போட்டியை நடத்தும் ரஷியா-சவுதி அரேபிய அணிகள் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன. நடப்புச் சாம்பியன் ஜெர்மனி 17-ஆம் தேதி மெக்ஸிகோவுடன் மோதும் ஆட்டம் மாஸ்கோவிலும், 5 முறை சாம்பியன் பிரேசில்-சுவிட்சர்லாந்துடன் மோதும் ஆட்டம் 18-ஆம் தேதி ரோஸ்டோவ் ஆன் டான் விளையாட்டரங்கிலும் நடக்கிறது,இதற்கிடையே உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு தீவிரபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போட்டி நடைபெறும் மைதானங்கள் அருகே விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஜாமர் கருவிகள், வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ரஷியாவுக்கு போட்டியைக் காண வரும் ரசிகர்கள் உள்ளூர் போலீஸாரிடம் தங்கள் பெயர்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷியா-சவுதி அரேபியா தொடக்க ஆட்டத்துக்காக 30 ஆயிரம் போலீஸார் மாஸ்கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுவர். உலகக் கோப்பை போட்டியை சிறப்பாக நடத்துவதின் மூலம் ரஷியா வல்லரசு நாடு என்பதை மீண்டும் உறுதி செய்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.

தொடக்க விழா சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.

GettyImages-883663274

DdOfgUfW4AElS34

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்