ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2019 வரும்மே 30 முதல்ஜூலை 14 ஆம்தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவிக்க தயாராகி வருகின்றன. நியூசிலாந்து அணி இன்று(புதன்கிழமை)  உலகக்கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் சான்ட்னெர் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். அவருடன் டாட் ஆஸ்ட்லேவை சேர்க்க நியூசிலாந்து தேர்வுக்குழு முடிவு செய்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது நியூஸிலாந்து அணி. 

கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிமுக வீரரான டாம் பிளண்டெல்லும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

நியூஸிலாந்து அணி விபரம் :

கேன் வில்லியம்சன் (கேப்டன்),மார்டின் கப்தில்,ஹென்றி நிகோல்ஸ், ராஸ்டெய்லர், டாம்லதம், காலின்மன்றோ, டாம்பிளண்டெல், ஜிம்மிநீஷம், காலின்டி கிராண்ட்ஹோம், மிட்செல்சாண்ட்னர், இஷ்சோதி, டிம்செளதி, மேட்ஹென்றி, லாக்கிஃபர்குசன், டிரெண்ட் போல்ட். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here