மனித சிறுநீரை சேகரித்து உர இறக்குமதிக்கு முடிவு கட்டுவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதிய, புதிய கண்டுபிடிப்புகளுக்கான முக்கியத்துவம் குறித்து பேசினார். இயற்கை கழிவுகளிலிருந்து உயிரி எரிபொருட்கள் எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகின்றன என்பதை உதாரணம் காட்டி பேசிய அவர், மனித சிறுநீரை சேகரித்து உர இறக்குமதிக்கு முடிவு கட்டுவோம் எனவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “ விமான நிலையங்களில் சிறுநீர் சேமிக்கும் வசதி வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உரங்களை நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். ஆனால் நாடு முழுவதும் சிறுநீரை சேமிக்கத் தொடங்கினால் உர இறக்குமதி தேவையிருக்காது. ஏனென்றால் சிறுநீரில் அதிகப்படியான ஆற்றல் வளம் இருக்கிறது. எதுவும் வீணாகாது. என்னுடைய சிந்தனைகள் எல்லாம் சிறப்பாக இருப்பதால் மற்றவர்கள் என்னுடன் ஒத்துழைப்பதில்லை ” என்றார். 

முன்னதாக சில வருடங்களுக்கு முன்பு பேசியிருந்த கட்கரி, தன் சிறுநீரை சேகரித்து டெல்லியில் உள்ள அலுவலக தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு அதனை உரமாக பயன்படுத்துவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here