உயிரிழந்தோருக்காக முதலை கண்ணீர் வடிக்கும் வேதாந்தாவின் அனில் அகர்வால்

0
311

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் .
இதையடுத்து தூத்துக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 25ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது . தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணைய தள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டத்தைப் பற்றி வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையின் அனில் அகர்வால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு டிவீட் செய்துள்ளார்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நிகழ்ந்த உயிரிழப்புக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன் . இவ்வாறு நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது, மேலும் நான் உயிரிழந்த குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

தற்போது வருடாந்திர பராமரிப்பு விடுமுறையில் உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது . நாங்கள் மீண்டும் ஆலையை துவங்க நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்தின் உத்தரவுகளை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுவோம் . நான் தூத்துக்குடி மக்களின் வளர்ச்சிக்கும் , அவர்களின் விருப்பத்துக்கும் உறுதுணையாக இருப்பேன் . மேலும் நான் சுற்றுசூழலுக்கும் தூத்துக்குடி , தமிழ்நாடு மக்களின் வளர்ச்சிக்கும் துணையாக இருப்பேன் “.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்