டிராகன் பழம் பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளிபழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்றஒட்டுயிர் தாவரம்.

அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தின் செதில்கள் பச்சை நிறமாகஇருக்கும். இதன் மையத்தில், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்திலான இனிப்புக் கூழ்,சிறு கருப்பு விதைகளுடன் இருக்கும்.சராசரியாக 700 முதல் 800 கிராம் எடை கொண்ட டிராகன்பழம், உலகில் வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

டிராகன் பழம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியை தரக் கூடியது. இப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.டிராகன் பழம் உயர் ரத்தஅழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாகச் செயல்படவைக்கிறது.

வைட்டமின் பி 3 இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து, பருமன்இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்குகிறது. டிராகன் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ்இருப்பதால் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது, பார்வைத் திறனையும், பற்களின்ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here