உயர் ஜாதியினர் எதிரே அமர்ந்து சாப்பிட்டதால் தலித் வாலிபர் அடித்துக்கொலை

0
189

உத்தரகாண்ட் மாநிலத்தில் உயர் சாதியினர் எதிரே அமர்ந்து சாப்பிட்டதால் தலித் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டத்தில் நைன்பாக் டெக்சில் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரதாஸ் (23). தலித் சமூகத்தைச்  சேர்ந்தவர். இவரது உறவினர் திருமணம்  கிராமத்தில் நடந்தது.

விழாவில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது உயர் ஜாதியினருக்கு எதிராக அமர்ந்து ஜிதேந்திரதாசும் உணவு சாப்பிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உயர் ஜாதியினர் ஜிதேந்திரதாசை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அவர் படுகாயம் அடைந்தார். ஏப்ரல் 26 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. 

உடனே அவரை உள்ளூரில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிசிச்சைக்கு பிறகு அவர் டேராடூனில் உள்ள ஸ்ரீமகான் இந்திரேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

9 நாட்களுக்குபிறகு,  தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 ஜிதேந்திர தாசை அடித்துக் கொன்றவர்கள் மீது ஜிதேந்திராவின் சகோதரி எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு  செய்துள்ளார். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை . 

அதே நேரத்தில் வழக்கை வாபஸ் பெறும்படி சிலர் தங்களை தொடர்ந்து மிரட்டுவதாக கொலை செய்யப்பட்ட ஜிதேந்திர தாசின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here