தமணியை நோக்கி பாயும் இரத்தத்தின் வேகம் அதிகரித்தால் அதுவே உயர் இரத்த அழுத்தம். உங்கள் இரத்த அழுத்தம் பொதுவாக 130/100 mmHG இருந்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதனை சரிசெய்யாவிட்டால் இதய நோய்களின் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிச்சயமாக உணவு பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். சோடியம் நிறைந்த உணவு அல்லது தரக்குறைவான ரிஃபைண்டு ஆயிலில் சமைத்த உணவை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.

துளசியின் நன்மைகள்

1. துளசியில் இருக்கக்கூடிய எசன்ஷியல் ஆயில் சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் இருமல் மற்றும் சளி தொந்தரவு இல்லாமல் இருக்கும்.

2. துளசியில் ஆண்டிபையாட்டிக், ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிகார்சினோஜெனிக் தன்மைகள் நிறைந்துள்ளது.

3. உடலில் கார்டிசால் ஹார்மோனை சரியான அளவில் சுரக்க செய்கிறது.

4. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றலும் துளசிக்கு உண்டு.

5. துளசி எண்ணெய் உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

துளசி டீ தயாரிப்பது எப்படி?

1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் 2-3 துளசி இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

2. மூன்று நிமிடங்கள் கொதித்த பின் இறக்கி ஒரு டம்ளரில் ஊற்ற வேண்டும். இதனை அப்படியே குடிக்கலாம் அல்லது ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இதில் ஃப்ளேவர் வேண்டும் என்று நினைத்தால் எலுமிச்சாறு சேர்த்து கொள்ளலாம்.

3. நீங்கள் விரும்பினால் இஞ்சி மற்றும் ஏலக்காய் சேர்த்தும் குடிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here