கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைநிலவரத்துக்கு ஏற்ப இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் நாள்தோறும் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.

petrol

ஏப்.1ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 76.48 ரூபாய் என விற்பனையாகி வந்தநிலையில் ஏப்.2 (இன்று) 76.59 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. அதேபோன்று டீசல், ஏப்.1ஆம் தேதி ஒரு லிட்டர் டீசல் 68.12 ரூபாய் என விற்பனையாகி வந்தநிலையில் ஏப்.2 (இன்று) 68.24 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ஒன்பது முறை உயர்த்தியுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 45.84 புள்ளிகள் உயர்ந்து 33,014.52 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 26.10 புள்ளிகள் உயர்ந்து 10,139.80 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஐசிஐசிஐ வங்கி 6.34 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.06ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்