சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 11 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 729 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 29 ஆயிரத்து 832 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் ஒரு சவரண் ஆபரணத் தங்கம் 29,744-க்கு விற்பனையான நிலையில், மாலையில் 29,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் விலை அதிகரித்து 52 ரூபாய் 60 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க- சீன வர்த்தகப் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.