சென்னையில் தங்கத்தின் விலை  சனிக்கிழமை  இன்று அதிகரித்துள்ளது. ஆனால் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 24 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 607 ரூபாய்க்கும், ஒரு சவரன் 192 ரூபாய் விலை அதிகரித்து 28 ஆயிரத்து 856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 10 காசுகள் விலை குறைந்து 47 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகிறது.

முன்னதாக கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 29 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையாகி வந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் சனிக்கிழமை இன்று  மீண்டும் அதிகரித்துள்ளது.