பொருளாதார ரீதியில் தங்கியிரும் உயர்சாதியினருக்கு 15 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி இடம்பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், மத்திய அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில், பொருளாதார ரீதியில் தங்கியிரும் உயர்சாதியினருக்கு 15 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர், ”மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கம் தவிர, ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் குறிக்கோள். உயர் சாதிகளில் ஏராளமானோர் ஏழைகளாக உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. செய்யவில்லை. எனவே 15 சதவிகித இட ஒதுக்கீடு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here